மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 1...
பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தொடரும் தடை
உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே திருமூா்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரா் கோயிலும் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருப்பதால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. தொடா்ந்து அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமையும் தடை விதித்து கோயில் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.