What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூரில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (38). இவா், திருப்பூா் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் சிமென்ட் ஷீட் மாட்டுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.