செய்திகள் :

RCB: ``பெங்களூரு அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்!" - கேப்டன்சிக்கு விருப்பம் தெரிவித்த படிதார்

post image

சையது முஷ்டாக் அலி டிராபி 2024 டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில், அஜின்க்யா ரகானேவின் அதிரடி ஆட்டங்களால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மறுபக்கம், ஆர்.சி.பி அணியில் ரூ. 11 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ரஜத் படிதார் தலைமையிலான மத்தியப்பிரதேச அணி இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறது.

ரஜத் படிதார்

அதுவும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 347 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும் படிதார், டெல்லிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் அதிரடியாக 29 பந்துகளில் 66 ரன்கள் அடித்து, தனது அணியை 13 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியை வழிநடத்துவது குறித்து படிதார் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஊடகத்திடம் பேசியிருக்கும் படிதார், ``ஆர்.சி.பி மிகப்பெரிய அணி. ஆர்.சி.பி-க்காக விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். அவர்கள் என்னைத் தக்கவைத்தது எனக்கு கூடுதல் நம்பிக்கை அளித்திருக்கிறது. ஆர்.சி.பி அணியை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். இருப்பினும், அது அணியின் முடிவைப் பொறுத்தது.

ரஜத் படிதார்

எனது பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டிடமிருந்து கேப்டன்சியைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். அவர் இந்தியாவின் சிறந்த பயிற்சியாளர் என்பது அனைவருக்கும் தெரியும். வீரர்களைக் கவனிப்பதும், அவர்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்." என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீரர் PCBக்கு வார்னிங்

சாம்பியன்ஸ் டிராபி நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் தான் அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தவிருக்கிறது. வரும் பிப்ரவரி 16 தொடங்கி மார்ச் 9 வரையில் இது நடக்கும். இன்னும் 66 நாள்கள் தான் இருக்கிறது. ... மேலும் பார்க்க

Dhoni: `அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' - RPS கேப்டன் பதவி நீக்கம் குறித்து சஞ்சீவ் கோயங்கா

2017-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் தோனியை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்தவர் என்று பாராட்டியவரும், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளருமான சஞ... மேலும் பார்க்க

Smriti Mandhana: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை... அசத்திய ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசிப் போட்டியில் சதமடித்து புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.மூன்று ஒருநாள... மேலும் பார்க்க

Jaiswal: ஆஸ்திரேலியாவில் கடுப்பான ரோஹித்... ஜெய்ஸ்வால் இன்றி புறப்பட்ட டீம் பஸ்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது கோபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

AUS-W vs IND-W: சொதப்பிய இந்திய மகளிர் அணி... ஆஸியிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா!

அதிரடி காட்டிய ஆஸ்திரேலியாஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலேயே தோல்வியடைந்து தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல்... மேலும் பார்க்க

Vinod Kambli : சச்சின் - காம்ப்ளி சந்திப்பு தரும் வலியும்; மாபெரும் திறமையாளன் சரிந்த கதையும்

தன்னுடைய பால்ய நண்பனான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படம்தான் இணையத்தின் சமீபத்திய வைரல்.சச்சினைக் கண்டவுடன் வாஞ்சையோடு எழுந்தரிக்க முயன்று முடியாமல் தடுமாறிய காம்ப்ளியை பார்க்க... மேலும் பார்க்க