ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நிரம்பிய வாழைக்குளம் கண்மாய்
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடா் மலை காரணமாக மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பெய்த மழையால் பேயனாறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வாழைக்குளம் கண்மாய் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் மம்சாபுரம் - செண்பகத்தோப்பு சாலையில் ஒரு கி. மீ. தொலைவுக்கு நீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் சாலை வழியாக செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.