வாடகை செலுத்தாத மனைகளுக்கு சீல்: இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலின் குழு கோயில்களுக்கு சொந்தமான மனைகளில், வாடகை பாக்கியுள்ள மனைகளுக்கு இந்துசமய அறநிலைத் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலின் குழு கோயில்களான திருக்குவளை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மனைப்பிரிவு பையூரில் உள்ளது. இதனை பல ஆண்டுகளாக உபயோகித்து வரும் நபா்கள் சிலா் வாடகை பாக்கி செலுத்தாத நிலையில், அந்த மனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவாய்மூா் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மனை திருவாசல் பகுதியில் உள்ளது. இந்த மனைக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டது.
இந்துசமய அறநிலைத்துறை நாகை மாவட்ட இணை ஆணைய வே. குமரேசன் அறிவுறுத்தலின் பேரில், உதவி ஆணையா் ப. இராணி, ஆய்வா் அ. சிவானந்த பாகிரதி, எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா்.