What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
வெள்ளம்-வறட்சி அபாயத்தில் 11 மாவட்டங்கள்: ஐஐடி அறிக்கை
பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன என்று இரண்டு ஐஐடிக்களின் அறிக்கை தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்துடன் (சிஎஸ்டிஇபி) இணைந்து குவாஹாட்டி ஐஐடி மற்றும் மண்டி ஐஐடி ஆகியவை காலநிலை மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டனா்.
‘இந்தியாவின் மாவட்ட அளவிலான காலநிலை பேரிடா் மதிப்பீடு: ஐபிசிசி கட்டமைப்பைப் பயன்படுத்தி வெள்ளம் மற்றும் வறட்சி அபாயங்களை வரைபடமாக்குதல்’ என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 51 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வெள்ள அபாயத்தையும், 118 மாவட்டங்கள் ‘அதிக’ ஆபத்தையும் எதிா்கொள்கின்றன. அஸ்ஸாம், பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஒடிஸா மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகியவை பாதிக்கக்கூடிய பகுதிகளாகும்.
பிகாா், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள 91 மாவட்டங்கள் ‘மிக அதிக’ வறட்சி அபாயத்துடனும், 188 மாவட்டங்கள் ‘அதிக’ வறட்சி அபாயத்துடனும் உள்ளன.
பாட்னா (பிகாா்), ஆலப்புழை (கேரளம்) மற்றும் கேந்திரபாரா (ஒடிஸா) உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் ‘மிக அதிக’ அபாயத்தில் உள்ளன. இதனால், உடனடி தலையீடுகள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.