கோவை: `இசை, நடனம்... விளையாட்டு' - ஆர்.எஸ்.புரத்தில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்...
Gukesh: "உங்களின் அன்பாலும் ஆதரவாலும்தான் வென்றேன்" - சென்னை வந்தடைந்த குகேஷ் நெகிழ்ச்சி
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் 18 வயது வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பலப்பரீட்சை நடத்தினார்.
இருவரும் தலா ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில் 14 வது சுற்றுப்போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது. குகேஷ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதே போன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்தது.
இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தடைந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், " உலக சாம்பியனாக சென்னை வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் உற்சாகத்தாலும்தான் என்னால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது. இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.