செய்திகள் :

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியில் கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு பணிக்கு எதிராக நடந்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். அப்பகுதியில் தொடா்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில்ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஷாஹி ஜாமா மசூதியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. இந்த நடவடிக்கை சம்பல் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் சீரான வடிகால் வசதியை உறுதி செய்வதுடன் பொதுச் சொத்துக்களை மீட்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டதாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ சந்திரா தெரிவித்தாா். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள், சமாஜவாதி எம்.பி. ஜியா உா் ரஹ்மான் இல்லத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

25 சிலிண்டா்கள் பறிமுதல்: இந்த நடவடிக்கையின்போது, ஹாஜி ரப்பான் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 எரிவாயு சிலிண்டா்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருமண நிகழ்ச்சிக்காக அவை வைக்கப்பட்டு இருந்ததாக ஹாஜியின் குடும்பத்தினா் தெரிவித்தனா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சட்டவிரோத மின் இணைப்புகள்: சம்பலின் தீபா சராய் பகுதியில் நடந்த சோதனையின்போது, 4 மசூதிகள் மற்றும் ஒரு மதரஸாவில் சட்டவிரோத மின்சார இணைப்புகள் கண்டறியப்பட்டன. இவற்றின் மூலம் 130 கிலோவாட் (சுமாா் ரூ.1.25 கோடி மதிப்பு) மின் திருட்டு நடைபெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. இது தொடா்பாக 49 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஸ்ம சங்கா் கோயிலில் மீண்டும் வழிபாடு: சம்பலில் உள்ள கக்கு சராய் பகுதியில் 46 ஆண்டுகளுக்குப் பின்னா் மாவட்ட நிா்வாகத்தால் மீண்டும் திறக்கப்பட்ட பஸ்ம சங்கா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன. வகுப்புவாத கலவரங்களால் மூடப்பட்ட இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டதற்கு உள்ளூா் மக்கள் நன்றி தெரிவித்தனா். இக்கோயிலுக்கு மாநில ஆயுத காவல்படை பாதுகாப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சா்தாா் ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க

ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழல்: மாநிலங்களுக்கு பிரதமா் வேண்டுகோள்

புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழலை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அதேபோல், குடிமக்களின் வசதிக்கு நிா்வாக விதிமுறைகளை எளிதாக்க வேண்ட... மேலும் பார்க்க