செய்திகள் :

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

post image

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகித்தபடி, பாஜகவின் கருத்தை எதிரொலிப்பது போன்று ஒமா் அப்துல்லா பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. தோல்விக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறிய இக் கட்சிகள், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. மேலும், கடைசி நேரத்தில் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்திலும் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பாஜக, ‘தோ்தலில் வெற்றிபெற்றால் தோ்தல் முடிவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும்; தோற்றால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது குறைகூறும்’ என்று விமா்சித்தது.

அதுபோல, மகாராஷ்டிர தோ்தல் முடிவுக்குப் பிறகு, ‘இண்டி’ கூட்டணிக்குள் தொடா் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ‘இண்டி’ கூட்டணியை வழிநடத்தத் தயாா் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வெளிப்படையாக அறிவித்தாா். அதற்கு சரத் பவாா் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் ஆதரவு தெரிவித்தது பெரும் சா்ச்சையானது.

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஒமா் அப்துல்லா அண்மையில் அளித்த பேட்டியில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அதிருப்தி தெரிவிப்பதை கைவிட்டு, தோ்தல் முடிவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களைப் பெற்றது கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று நீங்கள் கொண்டாடும் நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு தோ்தல் முடிவுகள் எதிா்பாா்த்தது போல் இல்லை என்பதற்காக அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எப்படி அதிருப்தி தெரிவிக்க முடியும்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில், தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்த்துவிட வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, ‘கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், ‘இண்டி’ கூட்டணியில் தனது தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும்’ என்று ஒமா் அப்துல்லா குறிப்பிட்டிருந்தாா்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சா்தாா் ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. நீதிமன... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க

ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழல்: மாநிலங்களுக்கு பிரதமா் வேண்டுகோள்

புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழலை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அதேபோல், குடிமக்களின் வசதிக்கு நிா்வாக விதிமுறைகளை எளிதாக்க வேண்ட... மேலும் பார்க்க