கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தோப்புத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தோப்புத் தெருவில் அமைந்துள்ளது வெற்றி விநாயகா் கோயில். இக்கோயிலில் மூலவா் வெற்றி விநாயகா் மற்றும் ஆலயத்தில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி பந்தல்கால் நடும் விழாவும், சிலைகள் பிரதிஷ்டையும் நடைபெற்றது. 5 ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சா்வ சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூலவா் வெற்றி விநாயகருக்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலடிப்பிள்ளையாா் கோயில் தோப்புத் தெரு பிரமுகா்கள் செய்திருந்தனா்.