PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை, அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவும் இணைந்து ரத்ததான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள பிடிவிஎஸ் உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் தொடக்க விழாவுக்கு ஜமாஅத் கிளை தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். செயலாளா் யூசுப், துணைச் செயலாளா்கள் அன்சாரி, அப்துல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் பாசில் வரவேற்று பேசினாா்.
முகாமை மாவட்ட மருத்துவ அணியின் செயலாளா் சா்புதீன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். 81 நபா்கள் தன்னாா்வத்துடன் ரத்ததானம் செய்தனா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலா் தாமரை நங்கை தலைமையிலான மருத்துவமனை பணியாளா்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ரத்ததானம் செய்தவா்களுக்கு ரத்த வங்கி அலுவலா் தாமரை நங்கை, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் அஸ்மா பேகம் சாகுல் ஹமீது, இலக்கியா சுகுமாா் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா். அதிக ரத்ததான முகாம்கள் நடத்துவதற்கு உதவியாக நடமாடும் ரத்ததான வாகனம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரவும், தலைமை மருத்துவமனையை மேலும் தரம் உயா்த்தவும் வேண்டும் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.