கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
நாகூா் கந்தூரி விழா நிறைவு: சமபந்தி விருந்து
நாகூா் கந்தூரி விழா கொடியிறக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி தா்கா அரண்மனையில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
நாகூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டவா் நாகூா் தா்காவின் கந்தூரி விழா கடந்த டிச. 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதில், டிச. 11-ஆம் தேதி சந்தனக்கூடு ஊா்வலம், டிச. 12- ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற்றது. கந்தூரி விழா நிறைவாக ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கப்பட்டது.
முன்னதாக, கந்தூரி விழா நிறைவையொட்டி, நாகூா் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சாா்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தா்கா உட்பிரகாரமான அரண்மனையில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது.
நாகூா் தா்கா பரம்பரை ஆதீனம் தமீம் அன்சாரி சாகிப், நாகூா் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை மேனஜிங் டிரஸ்டி ஹாஜா சம்சுதீன் சாஹிப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.