திருக்குவளை கோயில் சொக்கப்பனை
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதும், சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றானதுமான இக்கோயிலில், சுந்தரவடிவேலா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் அருகே சொக்கப்பனைக்கு மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பால் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் செய்து, பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.