கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
இராட்டிணமங்கலத்தில் கபடிப் போட்டி
ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் சி.கைலாசம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு கபடிப் போட்டியை தொடங்கிவைத்தாா்.
திமுக ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மேற்குஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா்.
இந்தப் போட்டியில் சென்னை, வேலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து கபடி அணிகள் கலந்துகொண்டன. வெற்றிபெற்ற அணிகளுக்கு முறையே முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.15,000 ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.10,000 ரொக்கம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் 16 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இராட்டிணமங்கலம் விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.