அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
Siragadikka Aasai: மனோஜின் முன்னாள் காதலியால் கதையில் திருப்பம் - என்ன நடக்கும்?
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு கிடைத்த ஆர்டர் கேன்சல் ஆகிவிடுகிறது. மீனாவின் தொழில் வளர்ச்சியை தடுக்கும் கதாபாத்திரத்தில் புதிய வில்லியாக சிந்தாமணி அறிமுகமாகியிருக்கிறார்.
அந்தப் பகுதி முழுவதும் இருக்கும் மண்டபங்களில் சிந்தாமணி தான் மலர் அலங்காரப் பணிகளின் ஆர்டரை எடுப்பார். மீறி வேறு யாராவது டெகரேஷன் ஆர்டர் எடுத்தால் அவர்களை மிரட்டி துரத்தி விடுவது வழக்கம். மிரட்டல் பேர்வழியான சிந்தாமணி இம்முறை மீனாவுக்குக் கிடைத்த ஆர்டரை மிரட்டி தட்டிப் பறிக்கிறார்.
மீனா கொடுத்த கொட்டேஷனில் இருந்த தொகைக்கு பாதி விலையில் செய்து தருவதாகக் கூறி சிந்தாமணி மீனாவின் ஆர்டரைப் பெற்றுவிட்டார். மீனா மண்டபத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு வேலை செய்பவர், சிந்தாமணி மோசமானவர், அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என மீனாவை எச்சரிக்கிறார்.
இவரை மீறி மீனா எப்படி தொழிலில் நிலைத்து நிற்கிறார் என்ற போக்கில் கதை நகரலாம்.
மனோஜ்-ரோகிணி வாங்கவிருக்கும் பீச் ஹவுஸில் இரண்டு நாட்கள் குடும்பத்தோடு தங்க வேண்டும் என மனோஜ் கேட்க விஜயா குஷியாகிறார். ஆரம்பத்தில் ஸ்ருதியும், ரவியும் வரவில்லை என்று சொல்ல முத்து அவர்களை வரச்சொல்லி அட்வைஸ் செய்கிறார். அனைவரும் ஒருமனதாக பீச் ஹவுசில் இரண்டு நாட்கள் தங்க ஒப்புக் கொள்கின்றனர்.
இதனிடையே மனோஜின் முன்னாள் காதலி ஜீவா வெளிநாட்டில் இருந்து வருவதாக முத்துவுக்கு போன் செய்கிறார். சமீபத்தில் வெளியான புரோமோவில் ஜீவா முத்துவின் காரில் பதிவுத்துறை அலுவலகம் வருகிறார். அங்கு ரோகிணியும் மனோஜும் இருப்பதைப் பார்த்து கோபப்படுகிறார்.
ஜீவா முத்துவிடம் ``யாரை பார்க்கக் கூடாதுன்னு நெனச்சேனோ அவர்களை பார்த்துட்டேன்’’ என்று சொல்லி கோபப்படுகிறார்.
அந்த புரோமோவில் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற வசனமும் இடம்பெற்றிருக்கிறது. ரோகிணி பல விஷயங்களில் பொய் சொல்லி ஏமாற்றி இருப்பதால் எந்த விஷயத்தில் இம்முறை சிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. மேலும் பீச் ஹவுசை வாங்க பதிவு அலுவலகம் வரை வந்திருக்கின்றனர்.
அங்கு தான் அவர்கள் ஏமாற்றப்பட்டதை மனோஜ் அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா கொடுத்த பணத்தில் தான் தொழில் தொடங்கினார்கள் என்ற உண்மை விரைவில் வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தெரிய வந்தால் அது அண்ணாமலையின் பணம் என்பதும் தெரியவரும். ரோகிணியின் அப்பா அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை என்பது தெரிந்தால் விஜயா சந்திரமுகியாக மாறிவிடுவார். இந்த வாரம் ஒரு பிரச்னை வெயிட்டிங்!