செய்திகள் :

BB Tamil 8 Day 71: புண்பட்ட ஜாக்குலின்; முத்துவின் ஸ்ட்ராட்டஜி; ரணகளமாக நடந்த நாமினேஷன் டாஸ்க்

post image
ஆட்கள் குறைய குறைய ஆட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பழைய கூட்டணிகள் உடைகின்றன. புதிய கூட்டணிகள் உருவாகின்றன. தனித்து ஆடும் போட்டிகள் பெருகத் துவங்கியிருக்கின்றன. ஆக.. தேவா பொழச்சுப்பான்.. யாரு சொன்னா..? இந்த எபிசோடுதான்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 71

‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. காலையிலேயே சுடச்சுட கேப்டன் டாஸ்க்.  இது உடல்பலத்தைக் கோரும் போட்டி. ஆனால் கூடவே மூளையையும் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் மைனாரிட்டி அரசு கூட்டணிகளின் தயவில் ஆட்சியை அமைக்கவேண்டிய சிக்கலான சூழல். இதர போட்டியாளர்களை நம்பித்தான் ஜெயிக்கமுடியும். 

எடையைத் தள்ளும் போட்டி. 400 கிலோ டார்கெட்டை அடைந்தால்தான் பெரும்பான்மையான எண்ணிக்கையில் ஆட்சியை அமைக்க முடியும் என்கிற விதியை நிர்ணயித்தார் பிக் பாஸ். முத்துவிற்கும் ஜாக்குலினிற்கும் உடனடி உடன்பாடு ஏற்பட்டது. ‘நீ ஜெயிச்சா.. உனக்கு.. நான் ஜெயிச்சா எனக்கு’ என்கிற ரீதியில் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. இன்னொரு வேட்பாளரான விஷாலுக்கு ‘பாய்ஸ் டீமின்’ ஆதரவு பலமாக இருந்தது. ஜோக்கர் கார்ட் மாதிரி தென்பட்டாலும் அவர்தான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கப் போகிறார் என்று யாராலும் அப்போது உணர முடியவில்லை. அந்த சூத்ரதாரி ராணவ். 

BBTAMIL 8: DAY 71

ஆட்டம் ஆரம்பித்தது. பவித்ராவை வண்டியில் ஏற்றி குப்பையைக் கொட்டுவதுபோல் எல்லையில் கொட்டினார் ஜாக்குலின். ரஞ்சித்தை ஏற்றிக் கொண்டு எமர்ஜென்சி வார்டிற்கு விரைவது போல் கொண்டு சென்றார் விஷால். விளைவு வண்டி வழியிலேயே நாட்டிக் கொண்டு ரஞ்சித் தலைகுப்புற விழுந்தார். தலையில் அடிபட்டாலும் சுதாரித்துக் கொண்டார். ஜாக்குலின் விரைவாகச் செயல்படுவதைப் பார்த்து முத்து விட்டுக்கொடுத்து அமைதியாக அமர்ந்துவிட்டார். இறுதியில் ராணவ் யார் வண்டியில் ஏறுவார் என்பது சஸ்பென்ஸ். அவர் விஷாலுக்கு முதலிலேயே தந்த வாக்கின்படி அவருடைய வண்டியில் ஏற மூச்சு வாங்கி தள்ளிச் சென்று இலக்கை அடைந்தார் விஷால். எனவே அவர்தான் வெற்றி. அவர்தான் இந்த வார கேப்டன். 

ஃபெயில் ஆன முத்துவின் ஸ்ட்ராட்டஜி


‘உன் ஸ்ட்ராட்டஜியே தப்பு’ என்று முத்துவிடம் ரயான் குற்றம் சாட்ட, “நான் யாருக்கும் விட்டுத்தரல. என் பக்கம் ராணவ்வும் மஞ்சரியும் மட்டும்தான் இருந்தாங்க. அதனாலதான் ஜாக்கோட டீல் போட்டேன். விஷால் ஸ்பீடா போனா நான் களத்துல இறங்கலாம்ன்னு பிளான். ஆனா ஜாக் உள்ளே புகுந்துட்டா. நான் விட்டுக் கொடுத்துட்டேன். நான் இல்லைன்னா ஜாக்.. அதான் பிளான்” என்றார் முத்து.  இறுதியில் ராணவ் ‘கேம் சேஞ்சர்’ ஆனதால் முத்துவின் திட்டம் பணால் ஆனது. 

முத்து, மஞ்சரி, ஜாக்குலின், தீபக் ஆகிய நால்வரும் தற்போதைக்கு லீடிங்கில் இருப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே காய்கள் நகர்த்தப்படுகின்றன. 11வது வார கேப்டனான விஷால், முந்தைய காப்டனான ரஞ்சித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, அமரன் பாணியில் ‘ரிப்போர்ட்டிங் சார்’ என்று சல்யூட் அடித்து பதவியை ஏற்றுக் கொண்டார். (இதே ரஞ்சித்தைத்தானே போன வாரம் கழுவிக் கழுவி ஊத்தினீங்க?!) 

BBTAMIL 8: DAY 71

“இப்ப இருக்க 12 பேர்தான் எல்லாத்துக்கும் பொறுப்பா இருக்கணும். என்னோட உதவி கேப்டனா மஞ்சரியை நியமிக்கிறேன்” என்று புத்திசாலித்தனமாக முதல் மூவை ஆரம்பித்தார் விஷால். அதிகமாக ஒரண்டை இழுக்கிற ஆசாமிக்கு பதவி கொடுத்து தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டால் தலைவலி குறைவாக இருக்கும் என்பது விஷாலின் யூகமாக இருக்கலாம். ஆனால் எதிர் தரப்பைச் சேரந்த மஞ்சரி நழுவிய மீனாக எஸ்கேப் ஆனார். ‘Conflict of interest’ என்கிற ஆங்கில வார்த்தையெல்லாம் போட்டு பயமுறுத்தினார். “எனக்கு என்னென்ன roles and responsibilities இருக்கும்ன்னு சொல்லுங்க.. அதை வெச்சுதான் நான் முடிவு பண்ண முடியும்” என்று நழுவ முயன்றது சாமர்த்தியமான எதிர்வினை. 

தூண்டில் போட்ட விஷால், எஸ்கேப் ஆன மஞ்சரி

மஞ்சரியின் கேள்விக்கு விஷால் தீர்மானமாக பதில் சொல்ல முடியாததால் ‘என்னால் இந்தப் பதவியை ஏற்க இயலாது’ என்று மஞ்சரி கை கழுவினார்.  சமையல், வீடு சுத்தம், பாத்திரம் சுத்தம் செய்யும் அணிகள் பிரிக்கப்பட்டன.  ஒரு ஆளுயர பொம்மையும் மூன்று கத்திகளும் வைக்கப்பட்டிருந்தன. கேப்டன் பொறுப்பிலிருந்து தவறினால் கத்தியால் முதுகில் குத்தலாம். “அதை விடுங்க. வீட்ல நடக்கறதை ஃபோகஸ் பண்ணுங்க” என்று விஷால் சிரித்துக் கொண்டே சொல்ல “குத்தற வாய்ப்பை எப்படி விட முடியும் கேப்டன்” என்று கிண்டல் செய்தார் முத்து.

BBTAMIL 8: DAY 71

ஓப்பன் நாமினேஷன். கேப்டன் விஷாலையும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருக்கும் ஜெப்ரியையும் நாமினேட் செய்ய முடியாது. ராணவ் டைரக்டாக ஏற்கெனவே நாமினேட் ஆகி விட்டார். ஆக மற்றவர்கள் ஆளாளுக்கு மற்றவர்களின் மேல் குத்த வேண்டும். எல்லோரையுமே நாமினேட் வரிசையில் கொண்டு வந்தால்தான் ஆட்டம் சூடு பிடிக்கும். எனவே அந்த விஷயத்தை சிறப்பாக செய்தார்கள்.  ‘டாஸ்க்கை பர்சனலாக எடுத்துக் கொள்வதால் இவர்களிடம் ஆடவே பயமாக இருக்கிறது’ என்கிற காரணத்தைச் சொல்லி அருண் மற்றும் அன்ஷிதாவைத் தேர்ந்தெடுத்தார் மஞ்சரி. 

ரணகளமாக நடந்த நாமினேஷன் டாஸ்க்


தன்னுடைய காரணங்களைச் சொல்லும் போது எதிராளியும் புன்னகைக்கும்படி வாழைப்பழ ஊசி ஏற்றுவதில் முத்து விற்பன்னர். “சவுந்தர்யாவிடம் ஆங்ரி மற்றும் க்யூட் என்று இரண்டு மோடுகள் இருக்கின்றன” என்று வலிக்காமல் ஊசி குத்திய முத்து, பரம வைரியான அருணையும் நாமினேட் செய்தார். “இன்னமும் கூட ரியாக்ஷன்களை குறைச்சுக்க மாட்றாங்க” என்று இறுக்கமான முகத்துடன் சொல்லி சவுந்தர்யாவை நாமினேட் செய்தார் ஜெப்ரி.  ‘Bossy’ ஆக இருக்கிறார் என்கிற காரணத்தைச் சொல்லி மஞ்சரியையும் நாமினேட் செய்தார் ஜெப்ரி. 

BBTAMIL 8: DAY 71

“ரயான் இது வரைக்கும் கேமே ஆடலை. இப்பத்தான் ஆட ஆரம்பிச்சிருக்காரு. எனவே அவரை நாமினேட் செய்யறேன்” என்று சீரியஸாக சொல்லி  சபையை சிரிக்க வைத்தார் ராணவ். இவர் நாமினேட் செய்த இன்னொரு நபர் முத்து.  ஜாக்குலினை நாமினேட் செய்த சவுந்தர்யா, ‘நட்பு என்னும் விஷயத்தை பயன்படுத்திக் கொள்கிறார்’ என்பதை நீட்டி முழக்கிச் சொல்ல, ஏதோ அவார்டு படம் மாதிரி அவர்களின் நிதானமான ரியாக்ஷன்கள் காட்டப்பட்டன. 

ஆக இறுதியில் விஷால் மற்றும் ஜெப்ரியைத் தவிர அனைவருமே எவிக்ஷன் பிராசஸஸிற்கு நாமினேட் ஆகியிருக்கிறார்கள். களைகளைப் பிடுங்கி விட்டால் ஆட்டம் இன்னமும் சூடுபிடித்து அறுவடை சிறப்பாக நடக்கும். 

சவுந்தர்யாவின் கமெண்ட்டால் மனம் புண்பட்ட ஜாக்குலின்


கோவா கேங்கின் விரிசல் இன்னமும் அதிகமாகி விட்டது. ‘நான் தனியாள்’ என்பதை ஜெப்ரி ஏற்கெனவே அழுத்தமாக உணர்த்தி விட்டார். ஜாக்கின் நிழலில் இருந்தால் காணாமல் போய் விடுவோம் என்பதை சவுந்தர்யா உணர்ந்து வருவதால் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். மீதமிருக்கிற ரயான் மட்டும் அமைதி தூதுவராக இங்கும் அங்கும் பேச்சு வார்த்தை நடத்துவது அநாவசியம். அவருடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தலாம். 

BBTAMIL 8: DAY 71

சவுந்தர்யா சொன்ன நாமினேட் காரணம் ஜாக்குலினை புண்படுத்தி விட்டது. “அவ போகணும்னா போகட்டும். அதை வெளிப்படையா சொல்லி விடலாமே.. ஏன் உதவியும் செய்யணும். கூடவும் இருக்கணும்.. அப்புறம் என்னை பிளேம் பண்ணணும்?” என்று ஜாக் புலம்ப, சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார் ரயான். “எனக்குத் தோணிச்சு.. சொன்னேன்.. என்ன இப்ப?” என்கிற மோடிற்கு சென்ற சவுந்தர்யா ‘யப்பா. சாமி.. முடியல.. ஆள விடுங்க’ என்று எரிச்சலுடன் விலகிச் செல்ல ஜாக்குலினுக்கு கண்ணீர் பெருகியோடியது.  மஞ்சரி சமாதானம் சொன்னார். 

பிஸ்கெட் சாப்பிட்டா சோறு கிடைக்கும் - ஷாப்பிங் டாஸ்க்


பிறகு நடந்த ஷாப்பிங் டாஸ்க் சுவாரசியமாக இருந்தது. நெற்றியில் ஒரு பிஸ்கெட்டை வைத்து நகர்த்தி நகர்த்திக் கொண்டு வந்து வாய்க்குள் தள்ளினால் 500 பாயிண்ட். இதை பலரும் சிரமப்பட்டு செய்தார்கள். சிலர் இயல்பாகச் செய்து முடித்தார். சிலர் சொதப்பினார்கள். முகத்தின் தசைகளை சிவாஜி மாதிரி உபயோகித்து பிஸ்கெட்டை நகர்த்தி நகர்த்திக் கொண்டு வரும் போது நம்முடைய  ரியாக்ஷனும் அதனுடன் கனெக்ட் ஆகி ‘பிஸ்கெட் வாய்க்குள் விழுந்து விடாதா’ ன்று சஸ்பென்ஸ் படம் பார்க்கிற ஃபீல் ஆனது. இறுதியில் 4000 பாயிண்ட்டுகள் கிடைத்தன. 

BBTAMIL 8: DAY 71

சம்பாதித்த பாயிண்ட்டிற்குள் சமர்த்தாக ஷாப்பிங் செய்து முடித்தார்கள். என்றாலும் ‘கேரட் இல்லை, அதை எடுத்திருக்கலாம்’ என்கிற முணுமுணுப்புகள் எழுந்தன. மஞசரியின் புகாருக்கு ‘அந்த டென்ஷன்ல இருந்தாதான் தெரியும்’ என்றார் ஜாக்குலின். ஸ்பான்சர்தாரர்களின் தயவால் மக்களுக்கு நெய்யும் பால் பொருட்களும் கூடுதலாக கிடைத்தன. இனி டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும் என்பதால் ஆடுகளுக்கு தீனியை அதிகமாக்குகிறார் பிக் பாஸ். 

BB Tamil 8: "40 நிமிஷம் அதைமட்டுமே பேசிட்டு இருந்தாரு..."- கொதித்த அர்ச்சனா காரணம் என்ன?

கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.பிக் பாஸ் வீட்டில் அருணுக்கு நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக வீடியோ மூலம் குரல் கொடுத்து வருகிறார். ஏற... மேலும் பார்க்க

BB Tamil 8: `டாஸ்க்கில் மோதல்(?) ; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ராணவ்' - என்ன நடந்தது?

பிக் பாஸ் சீசன் 8-ன் 72- வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பிக் பாஸ் சொல்கிறார்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss 8 : `பிக் பாஸ் வீட்டில் நான் நானாகதான் இருந்தேன்' - எவிக்‌ஷனுக்குப் பிறகு தர்ஷிகா

பிக் பாஸ் சீசன் 8, 70 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.கடந்த இரு வாரங்களாக எதிர்பாரத டிவிஸ்ட்டாக டபுள் எவிக்‌ஷனில் இரு இரு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். போன வார டபுள் எவிக்‌... மேலும் பார்க்க

Bigg Boss Exclusive: ``செளந்தர்யா மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு" - ஆனந்தி ஓப்பன் டாக்

பிக் பாஸ் சீசன் 8, 70 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.கடைசி கட்டத்தை எட்டிவிட்டதால் விஜய் சேதுபதியும் நேற்று போட்டியாளர்களிடம் `ஒன் - ஒன்' நேர்காணல் வைத்துப் பேசியிருந்தார். க... மேலும் பார்க்க

மனைவியுடனான பிரிவு; சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷுடனும் சண்டை; என்னாச்சு பிக்பாஸ் மணிகண்டனுக்கு?

பிக்பாஸ் சீசன் 6 ன் போட்டியாளரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டனும் அவரின் மனைவியும் நடிகையுமான சோபியாவும் கருத்து வேறுபாடுடன் இருக்கிறார்கள்.இருவருக்குமிடையிலான பிரச்னையைத்தீர்த்து வைக்க... மேலும் பார்க்க