மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
புத்த கயாவில் இலங்கை அதிபர் வழிபாடு!
பிகாரின் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக வழிபாடு மேற்கொண்டார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், பௌத்தர்களின் யாத்திரை தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் புத்த கயாவுக்கு வருகை தந்து அங்குள்ள மகாபோதி கோயிலில் பிரார்த்தனை செய்தார்
இலங்கை அதிபர் அநுர குமார 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர், எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிபராகப் பதவியேற்று அநுரகுமார இந்தியா வந்திருப்பது இது முதல் பயணமாகும்.