மக்களவையிலே ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை! - சு.வெங்கடேசன் எம்.பி.
அரசுப் பணியாளர் தேர்வில் 100/101.66 மதிப்பெண் எடுத்த தேர்வர்!
மத்திய பிரதேச அரசுப் பணிக்கு ஆள்சேர்க்கும் தேர்வில், ஒரு தேர்வர் 100-க்கு 101.66 மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக இந்தூரில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள இளைஞர்கள், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு!
வனத்துறை மற்றும் சிறைத்துறைக்கு கூட்டு ஆட்சேர்ப்புத் தேர்வு 2023ஆம் ஆண்டில் மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.
இதன் முடிவை கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில், ஒரு தேர்வர் 100-க்கு 101.66 மதிப்பெண் பெற்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, முறையான விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் ஒருவர் பேசியதாவது:
“ஆள்சேர்ப்பு தேர்வில் பின்பற்றப்பட்ட இயல்பாக்குதல் செயல்முறையால் ஒரு வேட்பாளர் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பது மாநில வரலாற்றில் இதுவே முதல் முறை.
நியாயமற்ற இயல்பாக்குதல் செயல்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். வனக் காவலர், களக் காவலர் (நிர்வாகி) மற்றும் சிறைக் காவலர் (நிர்வாகி) ஆகிய பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வில் முறைகேடு நடந்துள்ளது, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்
இந்த விவகாரத்தில் எதுவும் செய்யாவிட்டால், இளைஞர்களால் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.