செய்திகள் :

மனைவியுடனான பிரிவு; சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷுடனும் சண்டை; என்னாச்சு பிக்பாஸ் மணிகண்டனுக்கு?

post image
பிக்பாஸ் சீசன் 6 ன் போட்டியாளரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டனும் அவரின் மனைவியும் நடிகையுமான சோபியாவும் கருத்து வேறுபாடுடன் இருக்கிறார்கள்.

இருவருக்குமிடையிலான பிரச்னையைத் தீர்த்து வைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல முறை முயற்சி எடுத்தும் இன்னும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள்.

இதுகுறித்து சோபியா மற்றும் மணிகண்டனுக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் சிலரிடம் பேசினோம்.

''சின்னச் சின்ன வேடங்களில் நடித்தபடியே சினிமா முயற்சியிலிருந்த மணிகண்டனுக்கு பிக் பாஸ் பெரியதொரு வெளிச்சத்தைத் தந்ததுன்னு சொல்லலாம்.  அந்த நிகழ்ச்சியில் கூட மனைவி மகன் மீது தனக்கிருக்கும் பிரியத்தைப் பத்திப் பேசியிருப்பார். பிக் பாஸ்ல இருந்து வெளியில வந்தபிறகு சில பட வாய்ப்புகள் அமைஞ்சதாக் கூடச் சொன்னாங்க.

இந்த நிலையில அந்த நிகழ்ச்சியில இருந்து வந்த பிறகு சில தொடர்புகள் மூலமா சென்னை நந்தனத்துல கிளப் ஒன்றை எடுத்து நடத்தத் தொடங்கினார். அதுல பிஸியானதுல இருந்தே அவரது நட்பு வட்டமே மாறிடுச்சுனும் அவரது நடவடிக்கைகள்ல மாற்றம் தெரியத் தொடங்குச்சுனும் சொல்றாங்க. எந்த நேரமும் நண்பர்கள் சகிதம் கிளப்லயே கிடந்ததாகவும் அதனால ஒருகட்டத்துல அவங்க வீட்டுல குறிப்பா அவங்க சகோதரியே இதுபத்திக் கேட்டதாகவும் சொல்லப்படுது. இதனால ஒருகட்டத்துல கோபிச்சுட்டு வீட்டுக்கு வராம தனியா ரூம் எடுத்துத் தங்கத் தொடங்கியிருக்கார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அவரது இந்த நடவடிக்கையால மனைவி சோபியாவுக்கும் என்ன செய்யறதுன்னே தெரியாம, 'அப்படின்னா நான் எதுக்கு இங்க இருக்கணும், நான் என்னுடைய பெற்றோர் வீட்டுக்கே போறேன்னு கிளம்பிட்டதோட, தனக்குன்னு வருமானம் வேணும்னு சீரியல்கள்ல கமிட் ஆகவும் செய்துட்டாங்க.இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் சோபியாவுக்கும் இடையிலான உறவுல எந்தவொரு சிக்கலும் இல்லை. ஐஸ்வர்யா சோபியாவை அவங்க வீட்டுலயே இருக்கச் சொன்னாதாக்கூட சொல்றாங்க.ஒருபுறம் வீட்டுலயும் கோபிச்சுட்டு இன்னொருபுறம் மனைவி குழந்தையையும்  பாக்காம இப்படி மணி இருக்கற தகவல் இன்டஸ்ட்ரியில அரசல் புரசலாத் தெரிய வரவே மணிகண்டனுக்கு விவாகரத்தாகிடுச்சுங்கிற தகவல் சமூக ஊடகங்கள்ல பெருசா போயிட்டிருக்கு. இப்போதைக்கு ரென்டு பேரும் தனித்தனியேதான் இருக்காங்கன்னாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரச்னையைத் தீர்க்க தொடர்ந்து முயற்சி செய்துட்டுதான் இருக்காங்க'' என்கின்றனர் இவர்கள்

Bigg Boss Exclusive: ``செளந்தர்யா மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு" - ஆனந்தி ஓப்பன் டாக்

பிக் பாஸ் சீசன் 8, 70 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.கடைசி கட்டத்தை எட்டிவிட்டதால் விஜய் சேதுபதியும் நேற்று போட்டியாளர்களிடம் `ஒன் - ஒன்' நேர்காணல் வைத்துப் பேசியிருந்தார். க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 70: பின்னடைவைத் தந்ததா காதல்; கேப்டனாகத் தடுமாறும் ரஞ்சித்; தப்பித்த இருவர்

டாப் 5-ல் வந்திருக்கக்கூடிய அளவிற்கு திறமையான ஆட்டக்காரராக தன் ஸ்கோரைத் துவங்கிய தர்ஷிகா இன்று வெளியேறியிருக்கிறார். அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது காதலா? ‘ஒண்ணும் புரியலே. எங்கயோ மிஸ் பண்றேன்’ என்க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 69: மீண்டும் மீண்டும் கண்கலங்கிய பவித்ரா, உரையாடலில் மல்லுக்கட்டிய விசேவும் அருணும்!

லேபர் என்கிற Term சரியா தவறா என்று அருணிற்கும் விஜய் சேதுபதிக்கும் நடந்த விவாதம் சற்று நீளமாகவும் இழுவையாகவும் சென்றாலும் அது முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தில் தான் கன்வின்ஸ் ஆகாத வரைக்க... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; ஆனால்… ஒரு ட்விஸ்டை அரங்கேற்றிய பிக்பாஸ்!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 எழுபது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. சில வாரங்களுக்குப் பின் வைல்டு ... மேலும் பார்க்க