மகாராஷ்டிர முதல்வருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸை சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை விதான் பவனில் உள்ள அவரது அறையில் சந்தித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஃபட்னாவிஸுடனான சந்திப்பின்போது, முன்னாள் மாநில முதல்வருடன் சிவசேனா(யுபிடி) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதித்யா தாக்கரே, அனில் பராப் மற்றும் வருண் சர்தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள உத்தவ் தாக்கரே மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் சிவசேனா(யுபிடி) சட்டமன்ற கட்சி கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்ளும் பிரச்னையில் நீண்டகால கூட்டாளியான பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.