செய்திகள் :

விஜய் சேதுபதி குற்றவாளியா? அருண் பிரசாத்துக்கு ஆதரவாக அர்ச்சனா! (விடியோ)

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் பிரசாத் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகையும் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளருமான அர்ச்சனா விடியோ வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், தொழிலாளர் என்ற சொல் குறித்து அருண் - விஜய் சேதுபதி இடையே மிக நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு இருவருக்கு இடையிலான உரையாடல் ஒளிபரப்பானது.

பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிக் பாஸ் பேசும் ஒலிவாங்கி வழியாகவும் விஜய் சேதுபதி பேசி, அருணுக்கு விளக்கம் அளித்தார். இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அருணுக்கு எதிரான கருத்துகளையும் பலர் பரப்பிவந்தனர்.

இந்நிலையில், அருணுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை அர்ச்சனா விடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை அர்ச்சனா

அதில் அர்ச்சனா தெரிவித்துள்ளதாவது,

''உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் இரண்டு பேர் வெளியேறினார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டில் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டின் அளவு குறையவில்லை. இதனால் மற்ற இடங்களில் வேலையாள்களை அதிகப்படுத்திவிட்டு, சமையலுக்கு நபர்களைக் குறையுங்கள் என அருண் கூறினார். இதில் எந்தத் தவறும் இல்லை என நினைக்கிறேன்.

'லேபர், ஸ்கில்டு லேபர்' என்ற இரு சொற்களில்தான் பிரச்னை எழுந்தது. இதனை வேலை எனக் குறிப்பிடுவதில்தான் அருண் வெகுண்டெழுந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றது விளையாடுவதற்காக. அதுவே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மற்றவற்றை நாங்கள் பகிர்ந்து செய்ய வேண்டும். அருண் இதனை குடும்பமாகப் பார்த்ததால் வேலை எனக் குறிப்பிட வேண்டாம் என அருண் கூறினார்.

ஆனால் வார இறுதியில் இதனை வேறு மாதிரி மடைமாற்றம் செய்துவிட்டனர்.

தீபக்கிற்கும் அருணுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், லேபருக்கு இவ்வளவு டீ போதும் என்று பேசுகிறார். ஆனால், வார இறுதியில் இது பெரிய பிரச்னையாகிவிடும் என்பதற்காக அருணிடம் அழுது அதனை அப்போதே சரி செய்துவிடுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஸ்கில்டு லேபர், லேபர் என பிரிக்க வேண்டாம் என்பது எதனால் என்றால், நம் வீட்டில் நாம் அம்மாவை லேபர் என்றும் அப்பாவை ஸ்கில்டு லேபர் என்றும் கூறுவோமா?

லேபர் என்ற வார்த்தையை தரக்குறைவாக பார்க்கிறீர்களா அருண் என்று மாற்றிவிட்டது எனக்கு கடினமாக இருந்தது.

லேபருக்கு இவ்வளவு டீ போதும் என்ற தீபக்கின் வார்த்தையை பெரிதுபடுத்தாமல், சென்றுவிட்ட நிலையில், அருண் பேசியதை அவரின் மனதிலேயே ஊடுறுவி தவறு என நினைக்க வைத்தால் யாராக இருந்தாலும் அச்சப்படுவார்கள்.

இந்த விஷயத்தை இவ்வளவு பெரிதாக்க வேண்டியது ஏன்? எனத் தெரியவில்லை. இது பற்றி 40 நிமிடங்கள் பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என அர்ச்சனா கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ச்சனாவில் இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தொழிலாளி என்ற சொல் விவகாரத்தில் அருண் தவறாகப் புரிந்துகொண்டதாகவும், விஜய் சேதுபதி தக்க பாடம் புகட்டியதாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அருணுக்கு ஆதரவாக அர்ச்சனா தற்போது விடியோ வெளியிட்டுள்ளதால், விஜய் சேதுபதி பேசியது தவறா? என கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!

என் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியவர் அஜித்குமார்..! மனம் திறந்த மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர் நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்திருந்தார். பி... மேலும் பார்க்க

வலியில் துடித்த ராணவ்! பிக் பாஸுக்கு பெற்றோர் கோரிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ராணவ்வுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ராணவ் பி... மேலும் பார்க்க

அஜித் - த்ரிஷா... புகைப்படங்களை பகிர்ந்த விடாமுயற்சி படக்குழு!

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தி... மேலும் பார்க்க

நாயகியாக அறிமுகமாகும் எதிர்நீச்சல் ஆதிரை! ஜோடியாகும் ஸ்ரீகுமார்!

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சத்யா தேவராஜன் புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக யாரடி நீ மோகினி, வானத்தைப் போல ஆகிய தொடர்கள... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை படத்தின் அடுத்த பாட்டு இதுதான்!

நடிகர் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படத்தின் அடுத்த பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி... மேலும் பார்க்க