செய்திகள் :

பஞ்சாப்: இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு!

post image

பஞ்சாபில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் குண்டு வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில்,

அதிகாலை 3 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஆனால் எந்த சேதமும், யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. மாநிலத்தில் கடந்த சில நாள்களாக இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சந்தேக நபர்களை இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்தோம், இரண்டு சகோதரர்களும் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் சிறார். இன்னும் 3 பேர் எங்கள் இலக்கில் உள்ளனர், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுப் பணியாளர் தேர்வில் 100/101.66 மதிப்பெண் எடுத்த தேர்வர்!

மத்திய பிரதேச அரசுப் பணிக்கு ஆள்சேர்க்கும் தேர்வில், ஒரு தேர்வர் 100-க்கு 101.66 மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக இந்தூரில் ... மேலும் பார்க்க

மக்களவைக்கு இன்று ஆர்மீனியா நாட்டு எம்.பி.க்கள் வருகை!

ஆர்மீனியா நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் இன்று(டிச. 17) மக்களவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மக்களவையில் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை நேரில் பார்த்து அறிந்துகொண்டனர். இதற்காக ஆர்மீனிய குடியரசு நாடாளுமன்... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கூறியுள்ளார்.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்து... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: டி.ஆர். பாலு

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் ... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியது: காங்கிரஸ்

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவை... மேலும் பார்க்க