மக்களவைக்கு இன்று ஆர்மீனியா நாட்டு எம்.பி.க்கள் வருகை!
ஆர்மீனியா நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் இன்று(டிச. 17) மக்களவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மக்களவையில் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை நேரில் பார்த்து அறிந்துகொண்டனர்.
இதற்காக ஆர்மீனிய குடியரசு நாடாளுமன்றத் தலைவர் ஆலென் சிமோனியானோன் தலைமையிலான உறுப்பினர்கள் குழு புதுதில்லிக்கு வந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை சந்தித்து பேசியது. இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் அவை நிகழ்வுகளை அவர்கள் இன்று பார்வையிட்டனர்.
மக்களவையில் இன்று ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ அமல்படுத்துவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாக்கள் விவாதத்தின்போது ஆர்மீனியா எம்.பி.க்கள் அவையில் இருந்ததை காண முடிந்தது.