மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கடந்த மாதம் அங்கு சிகிச்சை பெற வந்திருந்த நோயாளி ஒருவருடன் வந்திருந்த இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்திய சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நிலை சீரானது.
இதையடுத்து மருத்துவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், அவர் மருத்துவர் பாலாஜியிடம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன் என்பதும், தனது தாய்க்கு நோய் குணமாகவில்லை என்ற ஆத்திரத்தில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.