கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடா்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைத் தொடர தடையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.