செய்திகள் :

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

post image

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடம் இருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தயார் முறையிட்டதை தொடர்ந்து, குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!

இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை போலீஸார் அவரை கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும்' - கனிமொழி

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் பொரு... மேலும் பார்க்க

சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து

சென்னை: சென்னை வேளச்சேரியில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து நேரிட்டது.தாறுமாறாக ஓடிய கார், சாலையில் சென்றுகொண்ட... மேலும் பார்க்க

சென்னையில் வந்து குவியும் கடத்தல் பொருள்கள்! என்னதான் தீர்வு?

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக ஏராளமான கடத்தல் பொருள்கள் பிடிபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளிலிருந்தும் கடத்தி வரப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள், சுங்கத் து... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டு... மேலும் பார்க்க

கோவை பாஷா இறுதி ஊர்லவம்: அதிவிரைவுப் படை குவிப்பு!

கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்தையொட்டி, மத்திய அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக... மேலும் பார்க்க

சென்னையில் இன்று கனமழை, நாளை மிக கனமழை!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகு... மேலும் பார்க்க