கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: டி.ஆர். பாலு
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியது: காங்கிரஸ்
திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:
“அரசியல் சாசன திருத்தம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், ஜனநாயகத்தை அழிப்பது போன்று உள்ளது. அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதபோது எப்படி மசோதாவை நிறைவேற்றுவீர்கள்.
வாக்காளர்கள் வாக்களித்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும். இந்த உரிமையை பறிக்க முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை என்பது கடினமாக இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று 2015-ல் தாக்கல் செய்யப்பட்ட 9வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை நிலைக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதத்துக்கு அவைக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.