செய்திகள் :

Aus v Ind : 'ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்த இந்தியா; சுவாரஸ்யமடையும் பிரிஸ்பேன் டெஸ்ட்' - Day 4 Review

post image
பிரிஸ்பேன் டெஸ்ட் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது. முக்கிய பேட்டர்கள் சொதப்பிய போதும் கடுமையாக போராடி இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து மீண்டிருக்கிறது. நான்காம் ஆட்டத்தில் என்ன நடந்தது? முழுமையான அலசல் இங்கே.
ராகுல்

இந்திய அணி நேற்று 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கே.எல்.ராகுலும் ரோஹித் சர்மாவும் க்ரீஸில் நின்றிருந்தனர். இன்று இருவருமே ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கம்மின்ஸ் வீசிய இன்றைய நாளின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே கே.எல்.ராகுல் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆனால், நல்ல வேளையாக ஸ்மித் அந்த கேட்ச்சை ட்ராப் செய்தார். முதல் பந்து என்பதால் ஸ்மித் அவ்வளவாக தயாராக இருந்திருக்கவில்லை. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ராகுல் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். நிலைத்து நின்று ஆடினார். ஆனால், இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா வழக்கம்போல எந்த க்ளூவும் இல்லாமல் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு அரைகுறையாக பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். இதன்பிறகு ஜடேஜா களத்துக்கு வந்தார். ராகுல் - ஜடேஜா கூட்டணி நின்று ஆடி அசத்தியது. இந்தியாவை கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டது.

ஜெய்ஸ்வால், கில், கோலி, ரோஹித் என இந்தியாவின் மற்ற முக்கிய பேட்டர்களெல்லாம் சொதப்ப அவர்களுக்கு பாடமெடுக்கும் வகையில் ராகுல் ஆடிக் காட்டினார். அந்நிய மைதானங்களில் எந்த நேர்த்தியோடு ஆட வேண்டுமோ அத்தோடு ஆடினார். இந்திய அணியின் மற்ற பேட்டர்களிடம் இருந்த அவசரமும் தடுமாற்றமும் அவரிடம் இல்லவே இல்லை. நின்று நிதானமாக ஆடினார். பந்துகளை துரத்திச் சென்று பேட்டை விடவில்லை. ஷாட் ஆடுவதற்கு ஏதுவான பந்துகள் வரும் வரை காத்திருந்தார். ஃபுல் லெந்த்தில் வாட்டமாக வரும் பந்துகளை மட்டுமே ஷாட்டாக மாற்றினார். அதையுமே பந்தை முழுமையாக பார்த்து வரவிட்டு லேட்டாகவே ஆடினார்.

ராகுல் 84 ரன்களை அடித்திருந்தார் அல்லவா? இதில் 55% ரன்களை பேக்வர்ட் பாய்ண்ட், தேர்டுமேன், டீப் பைன், டீப் ஸ்கொயர் ஆகிய திசைகளிலேயே அடித்திருந்தார். இதிலிருந்து அவர் பந்துகளை கடைசி வரைக்கும் பார்த்து லேட்டாக ஆடினார் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதேமாதிரி, குட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகள் எதற்கும் பேட்டை விடவே இல்லை. மணிக்கட்டுக்கும் இடுப்புக்கும் கயிறால் கட்டியதை போல கச்சிதமாக பேட்டை விடாமல் கைக்குள் வைத்தே ஆடினார். மிக நேர்த்தியான பேட்டிங். இதுதான் மற்ற பேட்டர்களிடம் மிஸ்ஸிங். இன்னொரு பக்கம் ஜடேஜாவும் நன்றாக ஆடினார். தான் நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார். ஆப் ஸ்பின்னரான லயனை வைத்து ஜடேஜாவை வீழ்த்த வேண்டும் என்பது ஆஸியின் திட்டம். ஆனால், ஜடேஜா லயனை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். லாவகமான கால் நகர்த்தலின் மூலம் தற்காப்பாக ஆடினார்.

கே.எல்.ராகுல் நின்று பெரிய சதம் அடிப்பார் என எதிர்பார்க்கையில் லயனின் பந்தில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்லிப்பில் ஸ்மித் 'Blinder' ஆக ஒரு கேட்ச்சைப் பிடித்து முதலில் கேட்ச்சை ட்ராப் செய்ததற்கான பரிகாரத்தை தேடிக்கொண்டார். இடையில் ஹேசல்வுட் காயம் காரணமாக பெவிலியனுக்கு சென்றார். ஸ்கேனில் அவரது காயம் வீரியமாக இருப்பது தெரிய வந்ததால் அவர் தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ராகுலுக்கு பிறகு ஜடேஜாவுடன் நிதீஷ் ரெட்டி கூட்டணி சேர்ந்தார். இந்த கூட்டணியும் கொஞ்சம் ரன்களை சேர்த்தது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 246 ரன்களை எட்ட வேண்டியிருந்தது. மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்திய அணி இந்திய அணி முதலில் ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது

ஜடேஜா

அப்படி தவிர்த்தால் மட்டும்தான் போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால், விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்துகொண்டே இருந்தது. நிதீஷ் குமார் 61 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் போல்ட் ஆனார். ஆஸ்திரேலிய பௌலர்களும் ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசி எல்லா பந்துகளையும் ஆட வைக்கவே முற்பட்டனர். சிறப்பாக ஆடிய ஜடேஜா அரைசதத்தை கடந்த பிறகு சிக்சரையெல்லாம் பறக்கவிட்டார். ஆனால், அவரையும் டீப்பில் பீல்டர்களை செட் செய்து பொறி வைத்து கம்மின்ஸ் வெளியேற்றினார். ஜடேஜா அவுட் ஆகி கடைசி 1 விக்கெட் மீதமிருந்த நிலையில் பாலோ ஆனை தவிர்க்க இந்தியாவுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

ஆஸ்திரேலிய பௌலர்கள் எஞ்சியிருக்கும் விக்கெட்டை வீழ்த்தி பாலோ ஆன் கொடுக்க வேண்டி பவுன்சர்களாகவும் டைட்டாகவும் வீசிக்கொண்டிருந்தனர். ஆனால், பும்ராவும் ஆகாஷ்தீப்பும் இந்த அட்டாக்கை திறம்பட சமாளித்தனர். விக்கெட் வேட்டை நடத்திய கம்மின்ஸின் பந்தில் பும்ராவும் ஆகாஷ்தீப்பும் சிக்சர்களை பறக்கவிட்டனர். இந்திய அணியின் முக்கிய பேட்டர்கள் ஆடாத ஆட்டத்தை டெயில் எண்டர்களான இவர்கள் ஆடினர். இவர்களின் தீரத்தால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது.

ஆகாஷ்தீப்

நான்காம் நாளின் முடிவில் இந்திய அணி 252-9 என்ற நிலையில் இருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்திற்கு வந்து நிற்கிறது. அதிகபட்சமாக இந்திய அணியால் இந்தப் போட்டியை டிராதான் செய்ய முடியும். அதையாவது சரியாக செய்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Gukesh: "நல்ல செஸ் வீரர் என்பதை விட நல்ல மனிதனாக இருக்க வேண்டும்" - அம்மா அறிவுரையைப் பகிரும் குகேஷ்

18-வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சாம்பியன் பட்டதைக் கொண்டு வந்திருக்கிறார் தமிழக வீரர் குகேஷ். இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தன... மேலும் பார்க்க

WPL : ஆச்சர்யம் தந்த 16 வயது தமிழக சென்சேஷன்; அதிர்ச்சி அளித்த `Unsold' - Auction Analysis

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL)மூன்றாவது வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம் ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் நடந்தது. இந்த ஏலத்தில் சில அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் அரங்கேறியிருக்கின்றன. சில unca... மேலும் பார்க்க

Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' - இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக... மேலும் பார்க்க

Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதானா?

குகேஷ் தமிழரா தெலுங்கரா என ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருக்கிறது. 130 ஆண்டுகளுக்கும் மேலான செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியனாகியிருக்கும் சாதனையாளர். இவருக்கு முன்னால் ரஷ்ய ஜாம்பவா... மேலும் பார்க்க