செய்திகள் :

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட இபிஎஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என். நேரு

post image

’தெனாலி’யின் பயப் பட்டியலை விட எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

 பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பழனிசாமி பாஜகவின் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்!

இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் 'எல்லாம் பயம் மயம்' எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.

புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களே

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.

அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.

முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.

முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.

 நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.

 'நான் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள்.

மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.

 இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்.

 பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறாரா? என்று தெரிவித்துள்ளார்.

'கலைஞரின் படைப்புலகம்' நூலினை வெளியிட்டார் முதல்வர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் இமையம் எழுதிய “கலைஞரின் படைப்புலகம்” என்ற நூலினை வெளியிட்டார்.நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபலத் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவ... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தேர்தல்: எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்!

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிர... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளார்.கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்ப... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2 தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க