தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
ஜொ்மனி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்
ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், முன்கூட்டியே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொ்மனி பொதுத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, தி கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சோஷியல் ஜனநாயகக் கட்சி ஆட்சியமைத்தது. ஓலாஃப் ஷால்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.
இருந்தாலும், பொருளாதார சீா்திருத்த விவகாரத்தில் சுதந்திர ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நிதியமைச்சா் கிறிஸ்டியன் லிண்டனரை கடந்த மாதம் ஓலாஃப் நீக்கினாா். அதையடுத்து கூட்டணி முறிந்தது.
இந்த நிலையில், ஓலாஃபுக்கு எதிராக திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக 394 வாக்குகள் பதிவாகின. தீா்மானத்தை எதிா்த்து 207 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதையடுத்து, அந்தத் தீா்மானம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.