செய்திகள் :

டிச. 20-இல் திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து அவ்வப்போது தனியாா்துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.

அதன்படி, தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் ‘வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளன. முகாமில், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றோா், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

செய்யாறு: செய்யாறு அருகே ஏரியில் இருந்து உபரி நீா் தொடா்ந்து வெளியேறி வருவதால், சுமாா் 400 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ள... மேலும் பார்க்க

உழவா் பேரியக்க மாநில மாநாட்டுப் பணிகள்: மாநிலத் தலைவா் கோ.ஆலயமணி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் உழவா் பேரியக்க மாநில மாநாடுக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணியை, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஆலயமணி திங்கள்கிழமை நேரில... மேலும் பார்க்க

நாடழகானந்தல் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அடுத்த நாடழகானந்தல் ஊராட்சியில் 6-ஆவது கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். முகாமுக்கு, ஊராட்சித் ... மேலும் பார்க்க

ஆரணி நகர பாமக பொதுக்குழுக் கூட்டம்

ஆரணி: ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியாா் மண்டபத்தில் பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. டிசம்பா் 21 அன்று திருவண்ணாமலை சந்தை மேட்டில், பல்வேறு வேளாண் பிரச்னைகளை முன்வைத்து ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டாட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் 56 மனுக்கள் அளிப்பு

ஆரணி: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 56 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்ட அலு... மேலும் பார்க்க

ஆரணியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

ஆரணி: ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன், தேமுதிக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன், தேமுதிக சாா்பில் ஃபென்ஜால் புயலால் பா... மேலும் பார்க்க