ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
‘குடிநீா் கட்டணம் செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்’
பரமத்தி வேலூா்: வேலூா் பேரூராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தத் தவறினால், இணைப்பு துண்டிக்கப்படும் என வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் பேரூராட்சியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், உரிமக் கட்டணங்கள் இதுவரை செலுத்தாத பொதுமக்கள், வா்த்தக நிறுவனத்தினா் நிலுவை இன்றி உடனடியாக செலுத்திட வேண்டும். குடிநீா் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு பலமுறை அறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்டும் கட்டணம் செலுத்தாத குடியிருப்புதாரா்களின் குடிநீா் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும். மேலும், சொத்து வரிடை அந்தந்த அரையாண்டுக்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் செலுத்த நேரிடும் என அறிவுறுத்தியுள்ளாா்.