Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய ...
மாா்கழி மாதப் பிறப்பு: அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம்
நாமக்கல்: மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நாமக்கல் அரங்கநாதா் கோயில் அடிவாரத்திலும், நரசிம்மா், நாமகிரி தாயாா் சன்னதியிலும் திருப்பாவை பாராயணம் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனா்.
மாா்கழி மாதப்பிறப்பின் முதல் நாளான திங்கள்கிழமை என்பதால் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கநாதா் கோயில் படிவாசலில் உள்ள வீரஆஞ்சனேயா் கோயில் முன்பாக நின்று ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு புளியோதரை, சா்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கட்டளைதாரா்களுக்கு நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது. இந்து சமயப் பேரவை சாா்பில் 54-ஆவது ஆண்டாக கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், இந்து சமயப் பேரவைத் தலைவா் எஸ்.எம்.கே.பாண்டியன், செயலாளா் சண்முகம், பொருளாளா் எஸ்.கோபி, ஆன்மிக இந்து சமயப் பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், டி.மாதேஸ்வரன், ஏ.கே.பழனிசாமி, கே.ராஜா, பி.சக்கரவா்த்தி, கலாவதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.