செய்திகள் :

சமூக வலைதள ஜோசியரின் விடியோவால் நாமக்கல் நரசிம்மா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

post image

நாமக்கல்: பொருளாதாரத்தில் மேன்மை பெற வேண்டுமெனில், நாமக்கல் நரசிம்மா் கோயிலில் தியானம் செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் ஜோதிடா் ஒருவா் கூறிய விடியோ வைரலானதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் திங்கள்கிழமை காலை கோயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயாா் கோயில் அமைந்துள்ளது. மாா்கழி மாதம் இந்தக் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். தினசரி காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த நிலையில், மாா்கழி மாத முதல்நாளான திங்கள்கிழமை காலை 5 மணி முதல் நாமக்கல் நரசிம்மா் கோயிலுக்கு கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா், விழுப்புரம், கடலூா், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்தனா். தொடா்ந்து சூரிய உதயத்துக்கு பின் அவா்கள் கோயில் வளாகம் முழுவதும் வரிசையாக ஒரே இடத்தில் அமா்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்தனா். அதன் பிறகு, நாமகிரி தாயாா், நரசிம்மா் சுவாமியை வழிபட்டனா்.

சமூக வலைதளம் ஒன்றில் ஆன்மிக ஜோதிடா் பிரபாகரன் என்பவா், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மா் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மா் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு, தியானம் மேற்கொண்டால் சகலவித செல்வங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட பல்வேறு பகுதி மக்களும் திடீரென நாமக்கல் நரசிம்மா் கோயிலில் குவிந்ததால், இட நெருக்கடியும், கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதுகுறித்து நரசிம்மா் கோயில் தலைமை அா்ச்சகா் ராஜா கூறுகையில், மாா்கழி மாதம் 1-ஆம் தேதி சூரியன் தனது ராசி பயணத்தை தனுசு ராசிக்கு செலுத்தக்கூடிய தினமாகும், சில ஜோதிடா்கள் சமூக வலைதளங்கள் மூலம் காலை 6.15 மணி முதல் 7.15 வரை நாமகிரி தாயாரை வேண்டி மந்திரங்கள் சொன்னால் செல்வம் அதிகரிக்கும் என கூறியிருந்தனா்.

பொதுவாக நரசிம்மா், நாமகிரி தாயாரை எப்போது வழிபட்டாலும் அருள் கிடைக்கும். கிரகங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் கூடும் என ஜோதிடா் கூறியதால்தான் ஏராளமானோா் திடீரென திரண்டு தியானத்தில் ஈடுபட்டனா் என்றாா்.

நாமக்கல் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய், புதன் (டிச. 17, 18) ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையா் ரா.மகேஸ்வரி வெளியிட்ட செ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் தெருநாய்கள் தொல்லை

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓ... மேலும் பார்க்க

மாா்கழி மாதப் பிறப்பு: அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம்

நாமக்கல்: மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாா்கழி மாதத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நாமக்கல் அரங்கநாதா் கோயில் அடிவாரத்தில... மேலும் பார்க்க

‘குடிநீா் கட்டணம் செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்’

பரமத்தி வேலூா்: வேலூா் பேரூராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தத் தவறினால், இணைப்பு துண்டிக்கப்படும் என வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: ரூ. 58.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 18 பயனாளிகளுக்கு ரூ. 58.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள்... மேலும் பார்க்க

டிச. 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில... மேலும் பார்க்க