ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை மக்கள் ஏற்கமாட்டாா்கள்: காங்கிரஸ்
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையை மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டாா்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு விடுதலை பெற்று தந்த இந்திய ராணுவத்தினரின் வெற்றியைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விஜய் திவஸ் டிச. 16-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி காமராஜா் சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் செல்வப்பெருந்தகை திங்கள்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1971-இல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ராணுவத்தை அனுப்பி, ஒரு தோட்டாவைக் கூட பயன்படுத்தாமல் பாகிஸ்தானைப் பணிய வைத்து, வங்காளதேசத்தை தனி நாடாக்கினாா்.
இப்போது இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. சிறிய நாடுகள்கூட இந்தியாவை மிரட்டி வருகின்றன.
ஒரே நாடு, ஒரே தோ்தல் முறையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்காகவே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம். இந்திய மக்கள் அதை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என்றாா் அவா்.