செய்திகள் :

ஆய்வில் 90 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

post image

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள் கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களின் பாதுகாப்புக்கு நாடு தழுவிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்க... மேலும் பார்க்க

மாதபி விவகாரம்: நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா்: காங்கிரஸ்

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா். மூன்று நாள் அ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து விலகல்

மகாராஷ்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை எம்எல்ஏ நரேந்திர பாண்டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளாா். அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் ... மேலும் பார்க்க

நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்

‘இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமா் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமா் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா... மேலும் பார்க்க

தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்: பாஜக விமா்சனம்

புது தில்லி: தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது. ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு,... மேலும் பார்க்க