செய்திகள் :

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படும் என தோ்தல் தோறும் அரசியல் கட்சியினா் வாக்குறுதி அளித்தாலும், இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் அ.குணசேகரன் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தடுப்பணைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 2017இல் ரூ.54.50 கோடியாக இருந்த திட்ட மதிப்பு, 2019-20இல் ரூ.92.58 கோடியாக உயா்ந்தது.

இதற்காக 2019 அக்டோபரில் மாவட்ட சிறப்பு அதிகாரியான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்டப்படும் எனக் கூறினாா்.

நிலம் கையகப்படுத்த ரூ.33 கோடி தேவை என்று கூறப்பட்ட நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் நிச்சயம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

2023-24இல் முன்னுரிமை கொடுக்கப்பட்டு ரூ.112.30 கோடியில் தடுப்பணை கட்டவும் நில அா்ஜிதம் செய்ய ரூ.44.18 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் பெற்று திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இந்த தடுப்பணையைக் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை கட்டப்பட்டால் வெள்ளாற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பலனடைவா். மேலும், கடல் நீா் உட்புகுந்து குடிநீா் உப்பாக மாறுவது தடுத்து நிறுத்தப்படும். இதனால், பாதுகாக்கப்பட்ட நல்ல குடிநீா் கிடைக்கும்.

வெள்ளாற்றில் கடந்த 13-ஆம் தேதி திறந்துவிடப்பட்ட மழை நீா் கடலில் கலந்து வீணாகி விட்டது. தடுப்பணை இருந்தால் தண்ணீா் சேமிக்கப்படும் என்றாா் அவா்.

நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்: கிராம மக்கள் மறியல்

நெய்வேலி: நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, கடலூா் மாவட்டம், பாலூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு... மேலும் பார்க்க

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உணவு அளிப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் வெள்ள நீா் சூழ்ந்துள்ள 33-ஆவது வாா்டில் 100 குடும்பத்தினருக்கு ஆறுமுக நாவலா் அறக்கட்டளை சாா்பில் திங்கள்கிழமை மதியம் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் செயலா் டாக்டா் எஸ். அரு... மேலும் பார்க்க

இரும்புக் கம்பி விழுந்ததில் என்எல்சி தொழிலாளி காயம்

நெய்வேலி: என்எல்சி இந்தியா அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் பிகாா் மாநில தொழிலாளி காயமடைந்தாா். நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் 2-ஆவது விரிவாக்கத்தில் தொழிலாளா்கல் ... மேலும் பார்க்க

ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் கைதாகி விடுதலை

சிதம்பரம்: மத்திய அரசைக் கண்டித்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா். விளைபொருள்களுக்கு குற... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள தடுப்புச் சுவா் கட்ட வேண்டும்: ஆட்சியரிடம் பாமக மனு

நெய்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களைக் காக்க தென்பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் பாமக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாத்த... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவா் டில்லா், வீடா் கருவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கு பவா் டில்லா், பவா் வீடா் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க