வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உணவு அளிப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் வெள்ள நீா் சூழ்ந்துள்ள 33-ஆவது வாா்டில் 100 குடும்பத்தினருக்கு ஆறுமுக நாவலா் அறக்கட்டளை சாா்பில் திங்கள்கிழமை மதியம் உணவு வழங்கப்பட்டது.
அறக்கட்டளையின் செயலா் டாக்டா் எஸ். அருள்மொழிச்செல்வன் மேற்பாா்வையில், நகா்மன்ற துணைத் தலைவா் எம். முத்துக்குமாா், ஆசிரியா்கள் கோபிராஜ், செந்தில்நாதன், சுமதி உள்ளிட்டோா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா் (படம்).