செய்திகள் :

பிக் பாஸ் 8: தூக்கி வீசிய ஜெஃப்ரி! மருத்துவமனையில் ராணவ்!

post image

பிக் பாஸ் போட்டியில் டாஸ்கின்போது காயமடைந்த ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. 11-வது வாரம் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. இதில், போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் ராணவை தடுக்கும் ஜெஃப்ரி ஒரு கட்டத்தில் அவரை கீழே தள்ளிவிடுகிறார்.

இதையும் படிக்க : சென்னை, புறநகரில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

அதில் ராணவ் காயமடைந்து கடும் வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவர் நடிக்கிறார் என்று சில போட்டியாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு மத்தியில், ராணவை மருத்துவ அறைக்கு விஷால், அருண் உள்ளிட்டோர் அழைத்துச் செல்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராணவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த செய்தியை போட்டியாளர்களிடம் பிக் பாஸ் அறிவிக்கும் ப்ரோமோ செவ்வாய்க்கிழமை காலை வெளியாகியுள்ளது.

மேலும், ராணவ் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும், அவர் சிறிது நாள்கள் டாஸ்கில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பொம்மை டாஸ்கின்போது ஜெஃப்ரி, ராணவ் மற்றும் ரயான் ஆகியோர் அடித்துக் கொள்வார்கள். அப்போதே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இறுதி எச்சரிக்கையை தொகுப்பாளர் விஜய் சேதுபதி விடுத்திருப்பார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ள ஜெஃப்ரி, வேண்டுமென்று செய்தாவாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? எனத் தெளிவாக தெரியவில்லை.

வேண்டுமென்று தள்ளிவிட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இந்த வார இறுதியில் ஜெஃப்ரிக்கு எச்சரிக்கை அட்டையை விஜய் சேதுபதி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது... கறாராக பதிலளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு கறாரான பதிலைக் கொடுத்திருக்கிறார்.மகாராஜா திரைப்படத்தின் அபாரமான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கவனமாக அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்து வருகிறா... மேலும் பார்க்க

மார்கழி மாதப் பலன்கள்!

12 ராசிக்குமான மார்கழி மாதப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)இந்த மாதம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். நின... மேலும் பார்க்க

ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

புஷ்பா - 2 படத்தின் வசூல் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலைக் கடந்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1400 கோடி வரை வசூலித்து பலரையும்... மேலும் பார்க்க

அனில் கபூர் படத்தை இயக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்!

இயக்குநர் சிதம்பரம் பாலிவுட் படமொன்றை இயக்கி வருகிறார்.‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர... மேலும் பார்க்க

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.17-12-2024 செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப... மேலும் பார்க்க

இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நியூஸிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி... மேலும் பார்க்க