அனில் கபூர் படத்தை இயக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்!
இயக்குநர் சிதம்பரம் பாலிவுட் படமொன்றை இயக்கி வருகிறார்.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையும் படிக்க: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.
தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில், நடிகர் அனில் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.