Iran Hijab: ``சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்.." - ஹிஜாப் விவகாரத்தில் பின...
டிசம்பர் என்றாலே.. பயங்கர நிலநடுக்கம்! எப்படி இருக்கிறது வானூட்டு தீவு?
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் வானூட்டு தீவிலும் எதிரொலித்ததால், தீவின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கின.
ஆஸ்திரேலியாவின் கிழக்குத் தீவுப் பகுதியான வானூட்டு தீவில், செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 7.3 ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தலைநகர் போர்ட் விலாவில் பயங்கர சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் அளவு கடுமையாக இருந்து, கடல் அலைகள் 3 அடி உயரத்துக்கு எழும்பியதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.