Iran Hijab: ``சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்.." - ஹிஜாப் விவகாரத்தில் பின...
AUSvIND: திடீர் காயம்; போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ஹேசல்வுட் - என்ன நடந்தது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் மூன்றாவது போட்டியின் இடையிலேயே காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் வெளியேறியிருக்கிறார். அவர் நடப்புத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட். ஸ்டார்க்குடன் இணைந்து இவர் வீசும் ஸ்பெல்கள் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருந்தது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும். அந்த இன்னிங்ஸில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சிறப்பாக ஆடி வந்த ஹேசல்வுட் காயம் காரணமாக அடிலெய்டு டெஸ்ட்டிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட்டை லெவனுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இந்நிலையில், குணமடைந்த ஹேசல்வுட் பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்கான லெவனில் இடம்பிடித்திருந்தார்.
இந்திய அணி நேற்று தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஹேசல்வுட் நேற்று 5 ஓவர்களை வீசியிருந்தார். விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இன்று ஒரே ஓவரை மட்டுமே ஹேசல்வுட் வீசியிருந்தார். அதற்குள் முழங்காலில் காயமென வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டிருக்கிறது.
இதன்பிறகுதான் அவர் பிரிஸ்பேன் டெஸ்ட்டின் எஞ்டியிருக்கும் நாளிலும் சீரிஸிலும் ஆடமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.