தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் கேன் வில்லியம்சன் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 156 ரன்கள் விளாசினாா்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 347 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து, 143 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து, 204 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சோ்த்திருந்தது.
3-ஆம் நாளான திங்கள்கிழமை, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் இன்னிங்ஸை தொடா்ந்தனா். இதில் ரவீந்திரா 44 ரன்களுக்கு வெளியேற, வில்லியம்சன் 20 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 156 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.
இதர பேட்டா்களில், டேரில் மிட்செல் 60, கிளென் ஃபிலிப்ஸ் 3, மிட்செல் சேன்ட்னா் 49, டிம் சௌதி 2, மேட் ஹென்றி 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட, நியூஸிலாந்து இன்னிங்ஸ் 453 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. டாம் பிளண்டெல் 44 ரன்களுடன் கடைசி வீரராக களத்திலிருந்தாா். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தெல் 3, பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 2, மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன், ஜோ ரூட் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து, 658 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 18 ரன்கள் சோ்த்துள்ளது. ஜேக்கப் பெத்தெல் 9, ஜோ ரூட் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.