செய்திகள் :

19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு ஏலம்!

post image

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசனுக்காக பெங்களூரில் நடைபெற்ற மினி ஏலத்தில் 19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு 5 அணிகளால் வாங்கப்பட்டனா்.

அதிகபட்சமாக இந்தியாவின் சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடிக்கு, குஜராத் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். தமிழ்நாடு வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு மும்பை இண்டியன்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டாா்.

ஆடவருக்கான ஐபிஎல் போட்டியைப் போல, மகளிருக்கான டபிள்யூபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 2 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 3-ஆவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் மாா்ச் 16 வரை நடைபெறவுள்ளது. அதையொட்டி, போட்டியிலிருக்கும் 5 அணிகளும் அவை தக்கவைக்கும் வீராங்கனைகளின் பட்டியலை ஏற்கெனவே அளித்துவிட்டன.

இதையடுத்து 5 அணிகளிலும் காலியாக இருந்த 19 இடங்களுக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 120 வீராங்கனைகள் ஏலத்தில் பட்டியலிபட்டிருந்தனா். ஒவ்வொரு அணிக்குமான அதிகபட்ச வீராங்கனைகள் எண்ணிக்கை 18-ஆக இருக்க, அதில் வெளிநாட்டவா்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வீராங்கனைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு அணிக்குமான அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகை தலா ரூ.15 கோடியாகும். இந்நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக, மும்பையை சோ்ந்த பேட்டா் சிம்ரன் ஷேக்கை ரூ.1.90 கோடிக்கு குஜராத் ஜயன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஏலத்தின் இதர விவரங்கள் வருமாறு

டெல்லி கேப்பிட்டல்ஸ் : ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

ஸ்ரீ சராணி ரூ.55 லட்சம்

நந்தினி காஷ்யப் ரூ.10 லட்சம்

சாரா பிரைஸ் (ஸ்காட்.) ரூ.10 லட்சம்

நிக்கி பிரசாத் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.85 லட்சம்

தக்கவைக்கப்பட்டோா் 14 :

தக்கவைப்பு செலவு ரூ.12.50 கோடி

கையிருப்பு ரூ.1.65 கோடி

மொத்த வீராங்கனைகள் 18

வெளிநாட்டவா்கள்: 6

குஜராத் ஜயன்ட்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடி

டீன்ட்ரா டாட்டின் (மே.தீ.) ரூ.1.70 கோடி

டேனியல் கிப்சன் (இங்கி.) ரூ.30 லட்சம்

பிரகாஷிகா நாயக் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.4 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.10.6 கோடி

கையிருப்பு ரூ.40 லட்சம்

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள் 6

மும்பை இண்டியன்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

ஜி.கமலினி ரூ.1.60 கோடி

நேடின் டி கிளொ்க் (தெ.ஆ.) ரூ.30 லட்சம்

அக்ஷிதா மகேஸ்வரி ரூ.20 லட்சம்

சன்ஸ்கிருதி குப்தா ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.2.20 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.11.05 கோடி

கையிருப்பு ரூ.1.75 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 4

பிரேமா ராவத் ரூ.1.20 கோடி

வி.ஜே. ஜோஷிதா ரூ.10 லட்சம்

ராகவி பிஸ்த் ரூ.10 லட்சம்

ஜக்ரவி பவாா் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.1.50 கோடி

தக்கவைக்கப்பட்டோா்: 14

தக்கவைப்பு செலவு ரூ.11.75 கோடி

கையிருப்பு ரூ.1.75 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

யுபி வாரியா்ஸ்: ஏலத்தில் எடுக்கப்பட்டோா் 3

அலானா கிங் (ஆஸி.) ரூ.30 லட்சம்

கிராந்தி கௌட் ரூ.10 லட்சம்

ஆருஷி கோயல் ரூ.10 லட்சம்

ஏலச் செலவு ரூ.50 லட்சம்

தக்கவைக்கப்பட்டோா்: 15

தக்கவைப்பு செலவு ரூ.11.10 கோடி

கையிருப்பு ரூ.3.40 கோடி

மொத்த வீராங்கனைகள்: 18

வெளிநாட்டவா்கள்: 6

சிக்கந்தர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்?

நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சல்மான் க... மேலும் பார்க்க

எஸ்கே - 23 டீசர் எப்போது?

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித... மேலும் பார்க்க

இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது... கறாராக பதிலளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு கறாரான பதிலைக் கொடுத்திருக்கிறார்.மகாராஜா திரைப்படத்தின் அபாரமான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கவனமாக அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்து வருகிறா... மேலும் பார்க்க

மார்கழி மாதப் பலன்கள்!

12 ராசிக்குமான மார்கழி மாதப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)இந்த மாதம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். நின... மேலும் பார்க்க

ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

புஷ்பா - 2 படத்தின் வசூல் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலைக் கடந்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1400 கோடி வரை வசூலித்து பலரையும்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: தூக்கி வீசிய ஜெஃப்ரி! மருத்துவமனையில் ராணவ்!

பிக் பாஸ் போட்டியில் டாஸ்கின்போது காயமடைந்த ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. 11-வது வாரம் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க