Iran Hijab: ``சட்டத்தில் திருத்தம் வேண்டும், அதனால்.." - ஹிஜாப் விவகாரத்தில் பின...
இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது... கறாராக பதிலளித்த விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு கறாரான பதிலைக் கொடுத்திருக்கிறார்.
மகாராஜா திரைப்படத்தின் அபாரமான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கவனமாக அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்து வருகிறார். இவர் நடித்து முடித்த விடுதலை - 2 திரைப்படம் வருகிற டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதற்கான புரமோஷன்களில் நடிகர்கள் சூரி, மஞ்சு வாரியருடன் விஜய் சேதுபதி கலந்துகொள்கிறார்.
இதையும் படிக்க: ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ந்த புரமோஷனில் நடிகர் விஜய் சேதுபதியிடம், ‘விடுதலை - 2 படத்தில் நீங்கள் இளமையாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது டீ- ஏஜிங்கா இல்லை ஏதாவது உணவுக்கட்டுபாடு மேற்கொண்டீர்களா?’ என ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு விஜய் சேதுபதி, “இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால், நீங்கள் இதை அறிந்துகொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு படத்தைப் பார்த்து பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுடன் நிறுத்திக்கொள்ளலாம். தோற்றத்திற்குப் பின் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்பதெல்லாம் தேவையற்றது. அதை அப்படியே விட்டுவிடுங்கள்” எனக் கறாராக பதிலளித்தார்.