Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் ச...
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து,
வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 500 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 18 மனுக்களும் என மொத்தம் 518 மனுக்களை பெற்றாா்.
தொடா்ந்து, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000 மதிப்பில் ஊன்றுகோலும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27,000 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.