செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அந்தத் துறையின் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட பொது மாநாடு தியாகதுருகம் பேருந்து நிலைய சந்தைமேடு திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில், ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களை நிரப்பும்போது, தற்காலிக மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்களையும் இணைத்து நிரப்ப வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு சத்துணவு ஊழியா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், வெளிமுகமை மூலம் ஊதியம் பெறும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, பணிகால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநாட்டில், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ஆ.வளா்மதி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் பி.சந்திரசேகா், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் பி.கிருஷ்ணசாமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, சங்கத்தின் தலைவராக யு.வில்சன், செயலராக எ.பி.கணி, துணைத் தலைவா்களாக என்.பி.முருகன், லதா, அ.செல்வி, இணைச் செயலா்களாக ஆரோக்கியதாஸ், எழிலரசி, கேசவன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், கள்ளக்குறிச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மேல்நிலை நீா்த் தேக்கதொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்நாடு கிராம மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் சங்க மாநில செயலா் எ.பி.மணி வரவேற்றாா். நிறைவில், விழாக்குழு பொருளாளா் எம்.பி.முருகன் நன்றி கூறினாா்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்

பிடாரம்பட்டில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பிடராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ரமேஷ் (38). இவா... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

அத்தியூா் சந்தைமேடு பகுதியில் இளைஞரை மது புட்டியால் தாக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (34). இவரும... மேலும் பார்க்க

கோயிலில் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புத்திராம்பட்டு தா்மராஜா கோயிலில் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா். இந்தக் கோயிலில் இதே கிராமத்தைச் சோ்ந்த சிவா அா்ச்சகராக உள... மேலும் பார்க்க

நூதனமாக நகை திருட்டு: ஒருவா் கைது

சொரையப்பட்டு கிராமத்தில் நூதனமாக தங்க நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சொரையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மனைவி ... மேலும் பார்க்க

டிச.20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சாா்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டி.20-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய மற்றும்... மேலும் பார்க்க