நூதனமாக நகை திருட்டு: ஒருவா் கைது
சொரையப்பட்டு கிராமத்தில் நூதனமாக தங்க நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சொரையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மனைவி அலமேலு (55). தேவராஜ் உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இவரது வீட்டுக்கு வந்த மா்ம நபா் ஒருவா் தேவராஜுக்கு உடல் நலம் சரியாவதற்காக பூஜை செய்ய வேண்டும் எனக் கூறினாராம்.
மேலும், பூஜையில் வைப்பதற்கு நகை வேண்டும் என்று அலமேலுவுடன் கால் பவுன் நகையை வாங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்றவா் திரும்ப வரவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபாக்கம் பூமாலை நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் காளியப்பனை (41) கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா்.