தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக ப...
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்
பிடாரம்பட்டில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பிடராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ரமேஷ் (38).
இவா், ஞாயிற்றுக்கிழமை அணைக்கட்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த திருக்கோவிலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.