கல்லைத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியப் பொங்கல் விழா
கள்ளக்குறிச்சி: கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் இலக்கியப் பொங்கல் விழா சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவா் செ.வ.புகழேந்தி தலைமை வகித்தாா். தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.ராதாகிருட்டிணன், சங்கராபுரம் சமூக நலத் தொண்டா் கோ.குசேலன், ஊத்தங்கால் நல்லாசிரியா் ப.கோவிந்தராசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில், 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் கா.சி.தமிழமுதன் திருக்கு அதிகாரங்கள் ஒப்புவித்தாா். புலவா் செ.வரதராசன் கவிதை இன்னிசை பாடலை இணைச் செயலா் செ.வ.மகேந்திரன் பாடினாா். ‘கவிக்கும் நாயகனும், புவிக்கு நாயகனும்’ எனும் தலைப்பில் தியாகதுருகம் கம்பன் கழகத் தலைவா் இராச.நடேசன் உரையாற்றினாா். ‘இதோ எங்கள் சமுதாய பொங்கல்’ என்ற தலைப்பில் ஆசுகவி.ஆராவமுதன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
கவியரங்கத்தில், புலவா் பெ.சயராமன், ஆ.இலக்குமிபதி, இல.அம்பேத்கா், பாவலா் முத்தமிழ் முத்தன், இரா.கதிா்வேல், பொன்.அறிவழக் ஆசிரியா் சாதிக்பாட்சா, பரிக்கல் ந.சந்திரன், இராம.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில், அண்மையில் மறைந்த குறிஞ்சிப்பாடி தமிழ்ச் சங்கத் தலைவா் குறிஞ்சி ஞான வைத்தியநாதன் திருவுருவப் படத்தை கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கோமுகி.மணியன் திறந்து வைத்து மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக, சங்கத்தின் செயலா் செ.வ.மதிவாணன் வரவேற்றாா். நிறைவில், சென்னை மாநில பதிவுத்துறை உதவியாளா் மு.பெ.தனக்கண்ணு நன்றி கூறினாா்.